Dec 2, 2025
Thisaigal NewsYouTube
2 ஆவது MRT Putrajaya ரயில் சேவை, இம்மாதம் இறுதி வரை இலவசம்
தற்போதைய செய்திகள்

2 ஆவது MRT Putrajaya ரயில் சேவை, இம்மாதம் இறுதி வரை இலவசம்

Share:

மலேசிய போக்குவர​த்துத்துறையில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ள 2 ஆவது MRT Putrajaya வழித்தடத்திற்கான ரயில் சேவை இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.
கிள்ளாள் பள்ளத்தாக்கில் இரண்டாவது மிகப்பெரிய போக்குவரத்தாக அமையவிருக்கும் MRT Putrajaya ரயில் சேவையை இன்று காலையில் செர்டாங் டெப்போவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


36 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய 2 ஆவது MRT Putrajaya ரயில் சேவை, இன்று பிற்பகல் 3 மணி முதல் பொது மக்களுக்கு திறந்து விடப்படுகிறது. இம்மாதம் இறுதி வரையில் பயணிகளுக்கு இலவச சேவை வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News