Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அனைத்து சமூகத்தினருக்கும் விரிவுபடுத்த வழி வகை செய்யப்படுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அனைத்து சமூகத்தினருக்கும் விரிவுபடுத்த வழி வகை செய்யப்படுகிறது

ஜார்ஜ்டவுன், ஜூன்.08-

வீட்டு விலையில் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு அண்மையில் அறிவிக்கப்பட்ட 5 விழுக்காடு தள்ளுபடியை அனைத்து சமூகத்தினருக்கும் விரிவுபடுத்த மாநில அரசு வழி வகை செய்து வருவதாகக் கூறியுள்ளார் பினாங்கு முதலமைச்சர் சோ கோன் யோவ். இந்தத் தள்ளுபடி அனைத்துத் தரப்பினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பெற்றதாகவும், இது வீடமைப்புத் துறையைப் புத்துயிர் பெறச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீடு வாங்கும் அனைவருக்கும் தள்ளுபடியை வழங்கும் வகையில் கொள்கையை மேம்படுத்த மேம்பாட்டாளர்களுடன் இணைந்து வீட்டுவசதி, சுற்றுச்சூழல் தொடர்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். சுந்தரராஜு செயல்படுவார் என்று சோவ் கூறினார். இந்த முயற்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், சமூக நீதியின் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →