Oct 10, 2026
Thisaigal NewsYouTube

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, அனைத்து மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் சமூக நீதியை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதியமைச்சருமான அவர், முக்கிய பொருளாதாரத் துறைகளுக்கு மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள், கிக் தொழிலாளர்கள், உணவு மற்றும் பொருள் விநியோகப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் அனைவரும் வசதியான மற்றும் நியாயமான வாழ்க்கையைப் பெறுவதை உறுதி செய்வதே அரசின் திட்டமிடலின் இறுதி நோக்கம் என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளையில், 2027 வரவு செலவுத் திட்டம் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வு வழங்காது என்றும், மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளதாகவும் ஆர்டிஎம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை ஒளிபரப்பான சிறப்பு நேர்காணலில் அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், நெல் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் வருமானப் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளுக்கான குறைந்த அணுகல் உள்ளிட்ட சவால்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே, மீன்வளம் குறைவாக உள்ள பகுதிகளில் மீன்பிடி உரிமங்களை வழங்குவதிலும் கவனம் தேவை எனக் குறிப்பிட்ட அவர், நகர்ப்புற மக்களின் தேவைகளுடன் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், 2027 வரவு செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு 510 பில்லியன் ரிங்கிட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசின் செலவினம் 459.8 பில்லியன் ரிங்கிட், அரசு தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 25 பில்லியன் ரிங்கிட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் ஊதியத்தை உயர்த்துதல், இலக்கு அடிப்படையிலான உதவிகளை மேம்படுத்துதல், நிதி ஒழுக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் உயர் மதிப்புக் கொண்ட தொழில்துறைகளை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்த ஐந்தாவது மடானி வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →