மன அழுத்தம் அல்லது அன்றாட வாழ்க்கையின் சுமைகளால் பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் தங்கள் மனநலத்திற்கு முன்னுரிமை அளித்து, உதவி பெறத் தயங்கக்கூடாது என தொடர்புத் துறை அமைச்சர் டத்ய்ஹோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
வேலை, குடும்பம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் போது, உடல் நலனைப் போலவே மனநலனையும் கவனித்துக் கொள்வது அவசியம் என உலக மனநல நாளான இன்று தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும், மனதிற்கு ஓய்வு அளிப்பதற்காகச் சிறிது நேரம் ஒதுக்குவதும், தனக்கான இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வதும் குற்ற உணர்வை ஏற்படுத்த வேண்டிய விஷயங்கள் அல்ல என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
உலகளவில் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.








