Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

மங்கோலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 83 ஆயிரம் கிலோ சாப்பிடத் தகுதியற்ற விலங்குக் கொழுப்பு எண்ணெயை, பாசீர் கூடாங் துறைமுகத்தில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் பறிமுதல் செய்துள்ளது.

இதன் மதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரத்து 606.26 ரிங்கிட் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பெரிய நெகிழ்வுத் தொட்டிகளில் கொண்டுவரப்பட்ட இந்தப் பொருட்களை, நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அமலாக்க அதிகாரிகள் சோதனையிட்டபோது கண்டுபிடித்தனர்.

மேலும், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, இறக்குமதி அனுமதி பெறாமல் இந்தப் பொருட்கள் கொண்டுவரப்பட்டது தெரிய வந்ததாக ஏகேபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மேலதிக விசாரணைக்காக அந்தப் பொருட்களானது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

ஃபிரேசர்’ஸ் ஹீல் மலைப்பாதையில் புலி நடமாட்டம்: 4 இடங்களில் கேமரா பொறிகள் பொருத்தம்

ஃபிரேசர்’ஸ் ஹீல் மலைப்பாதையில் புலி நடமாட்டம்: 4 இடங்களில் கேமரா பொறிகள் பொருத்தம்