பஹாங் மாநிலம், குவாந்தான்-பெக்கான் நெடுஞ்சாலையில் உள்ள பந்தாய் செப்பாட் கடற்கரைக்குச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
முஹ்மட் ரய்யான் கைருல் அனுவார் என்ற அந்தச் சிறுவனின் உடல், அவர் கடைசியாக நீரில் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.
இது குறித்து பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் முஹமட் சலாஹுடின் இசா கூறுகையில், இன்று காலை 9.56 மணிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து குவாந்தான் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கையின் போது, சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே மருத்துவப் பணியாளர்களால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டார்.
பின்னர், அவரது உடல் மேல்நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முஹமட் சலாஹுடின் தெரிவித்துள்ளார்.








