Nov 25, 2026
Thisaigal NewsYouTube

இணைய மோசடி: 7.33 பில்லியன் ரிங்கிட் இழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இணைய மோசடி: 7.33 பில்லியன் ரிங்கிட் இழப்பு

மலேசியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை நிகழ்ந்த இணைய மோசடிகளால், பொதுமக்களுக்கு 7.33 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மொத்தம் 192 ஆயிரத்து 869 மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 75 ஆயிரத்து 266 பேர் கைது செய்யப்பட்டு, 69 ஆயிரத்து 665 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 56 ஆயிரத்து 802 மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 1.56 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் ஆறு பேர் பெண்கள் என்றும், தனியார் துறையில் பணியாற்றுவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மோசடிப் பணத்தைப் பரிமாற்றப் பயன்படுத்தப்பட்ட 254 ஆயிரத்து 546 பணமூலக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மோசடிக் கும்பல்களுக்குத் தங்களது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்த மாணவர்களுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக் கும்பல்கள் ஐந்து நிமிடங்களுக்குள் பல வங்கிக் கணக்குகள் வழியாகப் பணத்தை மாற்றி எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தேசிய மோசடி நடவடிக்கை மையத்தின் 997 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →