Nov 25, 2026
Thisaigal NewsYouTube

பச்சிளம் குழந்தை கொலை: 19 வயது தாய் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பச்சிளம் குழந்தை கொலை: 19 வயது தாய் மீது குற்றச்சாட்டு

தனக்குப் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது பெண், இன்று தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

நூருல் இமான் நஜிஹா அப்துல்லா என்ற அந்தப் பெண், கடந்த நவம்பர் 14 முதல் 16ஆம் தேதிக்குள் பந்தாய் ரெமிஸ், கம்போங் பஞ்சோர் பகுதியில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் தனது குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குழந்தையின் பிறப்பை மறைத்து, அதன் உடலை ரகசியமாகப் புதைத்ததாக நூருல் இமான் நஜிஹா மற்றும் முஹமட் அய்டில் எய்க்மால் ஆகிய இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்தக் குற்றச்சாட்டை நூருல் இமான் நஜிஹா மறுத்து விசாரணை கோரிய நிலையில், முஹமட் அய்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக ஜனவரி 4ஆம் தேதியை நிர்ணயித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜசெக ஆட்சியில்  பேரா மாநில இந்திய சமூகத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – வூ கா லியோங்

ஜசெக ஆட்சியில் பேரா மாநில இந்திய சமூகத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – வூ கா லியோங்

மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகள் கசிவு – டோனி புவாவிடம் விசாரணை நடத்த போலீஸ் தயார்

மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகள் கசிவு – டோனி புவாவிடம் விசாரணை நடத்த போலீஸ் தயார்

சரவாக் வேட்புமனுத் தாக்கல் அன்று 4,899 போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் - மாநில போலீஸ் அறிவிப்பு

சரவாக் வேட்புமனுத் தாக்கல் அன்று 4,899 போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் - மாநில போலீஸ் அறிவிப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: அரசாங்கம், போலீஸுக்கு எதிராக குடும்பத்தினர் சிவில் வழக்கு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: அரசாங்கம், போலீஸுக்கு எதிராக குடும்பத்தினர் சிவில் வழக்கு

கைவிடப்பட்ட வாகனங்களை அகற்ற புதிய நடவடிக்கை - அரசாங்கம் பரிசீலனை

கைவிடப்பட்ட வாகனங்களை அகற்ற புதிய நடவடிக்கை - அரசாங்கம் பரிசீலனை

இளம் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் திலக் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு இரங்கல்

இளம் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் திலக் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு இரங்கல்