Nov 25, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் வேட்புமனுத் தாக்கல் அன்று 4,899 போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் - மாநில போலீஸ் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் வேட்புமனுத் தாக்கல் அன்று 4,899 போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் - மாநில போலீஸ் அறிவிப்பு

சரவாக் மாநிலத்தின் 13-ஆவது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் நவம்பர் 28-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் 4,899 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சரவாக் மாநில போலீஸ் ஆணையர் சைஃபுலிஸான் இஷாக் தெரிவித்துள்ளார்.

மேலும், டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது மாநிலம் முழுவதும் 7,541 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற சரவாக் மாநில போலீஸ் படையின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பணிகளுக்கு உதவியாக புக்கிட் அமான் தலைமையகத்திலிருந்து 54 பேரும், சபா போலீஸ் படையிலிருந்து 197 பேரும் என மொத்தம் 251 பேர் கூடுதலாக வரவழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தேர்தல் ஆணையம் மற்றும் ரேலா உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகளுடன் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் சைஃபுலிஸான் இஷாக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →