Nov 25, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோவில் குரங்கு தாக்கி 5 மாதக் குழந்தை காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோவில் குரங்கு தாக்கி 5 மாதக் குழந்தை காயம்

சுங்கை பூலோ பகுதியில் வீட்டில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 5 மாத ஆண் குழந்தையை காட்டு குரங்கு தாக்கியதில், குழந்தையின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.18 மணியளவில் கம்போங் பாயா ஜாராஸ் தெங்கா பகுதியில் நிகழ்ந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முஹமட் ஹாஃபிஸ் முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது குழந்தையின் 18 வயது தாய் சமைத்துக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த போது, அதன் அருகே குரங்கு இருந்ததைக் கண்டுள்ளார்.

திறந்திருந்த ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த அக்குரங்கு, அதே வழியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த குழந்தை, உடனடியாக சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இளம் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் திலக் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு இரங்கல்

இளம் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் திலக் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு இரங்கல்

ஐந்து பிரதமர்கள், மூன்று மாமன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்த ஈ.சி.ஆர்.எல். ரயில் திட்டம்! 99 விழுக்காடு நிறைவு!

ஐந்து பிரதமர்கள், மூன்று மாமன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்த ஈ.சி.ஆர்.எல். ரயில் திட்டம்! 99 விழுக்காடு நிறைவு!

சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!