நாட்டின் புகழ்பெற்ற தேசிய இலக்கியவாதி டத்தோ ஶ்ரீ ஏ. சமாட் சைட் தனது 91ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.
கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர், மாலை 6.10 மணியளவில் உயிரிழந்ததாக அவரது மகன் ஹெல்மி அப்துல் சமாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியாவின் நான்காவது தேசிய இலக்கியவாதியாக அங்கீகரிக்கப்பட்ட ஏ. சமாட் சைட், 1985ஆம் ஆண்டு தேசிய இலக்கிய விருதைப் பெற்றவர்.
1961ஆம் ஆண்டு வெளியான சலினா நாவல் உட்பட சுங்கை மெஙாலிர் லெசு, லாஙிட் பெத்தாங், ஹுஜன் பாகி ஆகியவை அவரது புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளாகும்.
மலேசிய இலக்கிய வளர்ச்சியில் அழியாத தடம் பதித்த அவரது மறைவு, நாட்டின் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.








