Nov 24, 2026
Thisaigal NewsYouTube

600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

கோலாலம்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களைப் புதுப்பிக்க அரசாங்கம் ஒதுக்கிய 600 மில்லியன் ரிங்கிட் நிதி வீண் செலவல்ல என்பதைப் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மெக்ரோனின் அண்மைய வருகை நிரூபித்துள்ளதாக கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபரின் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னணியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் அமைந்திருந்ததை மக்கள் பெரிதும் வரவேற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி ஒதுக்கீடு முதலில் அறிவிக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் எழுந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், கோலாலம்பூர் வளர்ச்சியடைவது அவசியம் என்றாலும், அதன் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் விழா மே 6 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கலை, பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளுடன் இவ்விழாவை எதிர்காலத்தில் ஆண்டு முழுவதும் நடத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படும் என ஹன்னா இயோ தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நான்கு அதிகாரிகளின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நான்கு அதிகாரிகளின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

மைஜிஓவி மலேசியா செயலி மூலம் கடப்பிதழைப் புதுப்பிக்கும் வசதி அறிமுகம்!

மைஜிஓவி மலேசியா செயலி மூலம் கடப்பிதழைப் புதுப்பிக்கும் வசதி அறிமுகம்!

நஜிப்பின் மன்னிப்பு வாரிய ஆவணக் கசிவு: விசாரணையைப் போலீஸ் தலைவரிடம் ஒப்படைத்தார் சைஃபுடின்!

நஜிப்பின் மன்னிப்பு வாரிய ஆவணக் கசிவு: விசாரணையைப் போலீஸ் தலைவரிடம் ஒப்படைத்தார் சைஃபுடின்!