Nov 24, 2026
Thisaigal NewsYouTube

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நான்கு அதிகாரிகளின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமானப்படை போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நான்கு அதிகாரிகளின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

சுபாங் விமானப்படைத் தளத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு மலேசிய விமானப்படை அதிகாரிகளின் தடுப்புக் காவல் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்கள் வரும் நவம்பர் 28ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என மத்திய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லாபுவானில் கைது செய்யப்பட்ட மற்றொரு விமானப்படை அதிகாரியின் தடுப்புக் காவல் நாளை நிறைவடையவுள்ள நிலையில், அதனை நீட்டிக்க போலீசார் விண்ணப்பிக்கவுள்ளனர்.

லாபுவானில் கைது செய்யப்பட்ட இரண்டு பொதுமக்கள் மற்றும் தாவாவ் பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு விமானப்படை அதிகாரிகளும் நவம்பர் 27ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் உள்ளனர்.

மேலும், கோலாலம்பூரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நான்கு பொதுமக்கள் இவ்வழக்கு தொடர்பில் மீண்டும் கைது செய்யப்பட்டு, நவம்பர் 30ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

மைஜிஓவி மலேசியா செயலி மூலம் கடப்பிதழைப் புதுப்பிக்கும் வசதி அறிமுகம்!

மைஜிஓவி மலேசியா செயலி மூலம் கடப்பிதழைப் புதுப்பிக்கும் வசதி அறிமுகம்!

நஜிப்பின் மன்னிப்பு வாரிய ஆவணக் கசிவு: விசாரணையைப் போலீஸ் தலைவரிடம் ஒப்படைத்தார் சைஃபுடின்!

நஜிப்பின் மன்னிப்பு வாரிய ஆவணக் கசிவு: விசாரணையைப் போலீஸ் தலைவரிடம் ஒப்படைத்தார் சைஃபுடின்!