Nov 24, 2026
Thisaigal NewsYouTube

ஐந்து பிரதமர்கள், மூன்று மாமன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்த ஈ.சி.ஆர்.எல். ரயில் திட்டம்! 99 விழுக்காடு நிறைவு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐந்து பிரதமர்கள், மூன்று மாமன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்த ஈ.சி.ஆர்.எல். ரயில் திட்டம்! 99 விழுக்காடு நிறைவு!

கிழக்குக் கரையோர மாநிலங்களையும் சிலாங்கூர் மாநிலத்தையும் இணைக்கும் கிழக்குக் கரையோர ரயில் திட்டமான இசிஆர்எல், ஐந்து பிரதமர்களின் ஆட்சிக் காலத்தைக் கடந்து தற்போது 99 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.

2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், மூன்று மாமன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதைப் பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா பாராட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர்களான துன் டாக்டர் மகாதீர் முஹமட், டான் ஶ்ரீ முஹிடின் யாசின், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகியோரின் பங்களிப்புடன், தற்போதைய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

665 கிலோமீட்டர் நீளமுள்ள இத்திட்டம் கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களைக் கடந்து கோத்தா பாருவையும் கிள்ளான் பள்ளத்தாக்கையும் இணைக்கிறது.

முதற்கட்டமாக கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான 520 கிலோமீட்டர் பாதை ஏறத்தாழ முழுமையடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக கோம்பாக்கிலிருந்து கிள்ளான் துறைமுகம் வரை ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →