நாடெங்கிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளிட்ட தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள குடியிருப்புகளில் நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையிலுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை விரிவுபடுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
தற்போது இத்தகைய குடியிருப்புகள் கூட்டுப் பராமரிப்பு நிர்வாக அமைப்புகளான ஜேஎம்பி அல்லது நிர்வாகக் கழகங்களான எம்சி மூலம் நிர்வகிக்கப்படுவதால், ஊராட்சி அமைப்புகளால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகார வரம்பு தொடர்பான சிக்கலைத் தீர்க்க, 1974-ஆம் ஆண்டு தெருக்கள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம், 1976-ஆம் ஆண்டு ஊராட்சி நிர்வாகச் சட்டம் மற்றும் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக நேற்று நவம்பர் 24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் ஙா கோர் மிங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கோலா கிராய் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ அப்துல் லாதிஃப் ரஹ்மான், Datuk Abdul Latiff தனியார் குடியிருப்புகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் வாகனங்கள் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








