Nov 25, 2026
Thisaigal NewsYouTube

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: அரசாங்கம், போலீஸுக்கு எதிராக குடும்பத்தினர் சிவில் வழக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: அரசாங்கம், போலீஸுக்கு எதிராக குடும்பத்தினர் சிவில் வழக்கு

மலாக்கா மாநிலம் டுரியான் துங்கால் பகுதியில் கடந்த ஆண்டு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூன்று இந்திய ஆடவர்களின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, அரசாங்கத்திற்கும், போலீசாருக்கும் எதிராக சிவில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த ஜி. லோகேஸ்வரன், டி. புவனேஸ்வரன் மற்றும் எம். புஷ்பநாதன் ஆகியோரின் குடும்பங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் சச்பிரிட்ராஜ் சிங் ஆகிய இருவரும் இந்த முடிவை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை போதுமானதாக இல்லை என்றும், அது மரணத்திற்கான சூழ்நிலையை மட்டுமே கண்டறியுமே தவிர, குற்றவாளிகளைத் தீர்மானித்து அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், சம்பவம் தொடர்பான ஒலிப்பதிவு மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட போதுமான ஆதாரங்கள் சட்டத்துறைத் தலைமை அலுவலகமான ஏஜிசியிடம் இருந்தும் கூட, இதுவரை யார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்றும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட குடும்பங்களே சட்டரீதியான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று தமது அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →