முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக் தொடர்பான மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் குறிப்புகள் வெளியான விவகாரத்தில், ஜசெக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான டோனி புவாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மூத்த போலீஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அடையாளச் சின்னங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில், இந்த விவகாரம் தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்க, விசாரணை அதிகாரியிடம், பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரை இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் எந்தவோர் அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வந்தாலும், போலீசார் விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








