Nov 25, 2026
Thisaigal NewsYouTube

பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை 200 ரிங்கிட்டாக உயர்வு! பெற்றோர் நேரில் பள்ளிக்குச் செல்ல அன்வார் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை 200 ரிங்கிட்டாக உயர்வு! பெற்றோர் நேரில் பள்ளிக்குச் செல்ல அன்வார் வலியுறுத்து

2027ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான ஆரம்பக் கல்வி உதவித்தொகை 200 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் நேரடியாகப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பெற்றோர் பள்ளிக்கு வருவதன் மூலம் ஆசிரியர்களை நேரில் சந்தித்து, தங்களது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மற்றும் பள்ளி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட முடியும் என அவர் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசியக் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பான ஏஐ தெமு ஏஐ (AI Temu AI) நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே சந்திப்புகளை ஏற்பாடு செய்யுமாறு பள்ளிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்கம் குறித்த தகவல்களை ஆசிரியர்கள் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றார்.

இதற்கு முன்பு 150 ரிங்கிட்டாக வழங்கப்பட்ட இந்த உதவித்தொகை, அடுத்த ஆண்டு 200 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 53 லட்சம் மாணவர்கள் பயனடைவதுடன், மொத்தம் ஒரு பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை உருவாக்குவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →