Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபுபாரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்
தற்போதைய செய்திகள்

கோலகுபுபாரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21 -

டி.ஏ.பி யைச் சேர்ந்த கோல குபுபாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹீயோங் காலமானார். அவருக்கு வயது 58. புற்று நோயினால் அவதியுற்று வந்த அந்த பெண் சட்டமன்ற உறுப்பினர், இன்று காலை 10 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.

மறைந்த லீ கீ ஹீயோங் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைக்காலம், கோலகுபுபாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு மசீச வேட்பாளர் ஓய் ஹூய் வேன்னை 1,702 வாக்குகள் வித்தியாசத்திலும், 2018 ஆம் ஆண்டு மசீச வேட்பாளர் வூன் கூன் மூன் னை 7,134 வாக்குகள் வித்தியாசத்திலும், கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட கெராக்கான் வேட்பாளர் தீயோ கீன் ஹோங் கை 4,119 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்து மூன்று தவணைக்காலம் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியை லீ கே ஹீயோங் தற்காத்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், லீ கீ ஹீயோங் கின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு ஏதுவாக அவர், சிலாங்கூர் சட்டமன்றக்கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து மருத்துவ விடுப்பில் சென்றார். கடந்த வாரம் மார்ச் 16 ஆம் தேதி லீ கீ ஹீயோங் , தமது 58 ஆவது பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டது.

லீ கீ ஹீயோங் - கின் மறைவு பல்வேறு தரப்பினருக்கு குறிப்பாக கோலகுபுபாரு தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசாங்கம் சார்பில்லீ கீ ஹீயோங் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்