ஜாசின்,பிப்.7
12 க்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு சிறார்களிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் வர்த்தகர் ஒருரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு சிறாருக்கும் தலா 50 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை பணம் கொடுத்து, அந்த வர்த்தகர் இத்தகைய வக்கிரச் செயலை புரிந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஜாமில் ரட்சி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மலாக்கா, ஜாசின், சிம்பாங் பெக்கோவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறார்கள் 57 வயதுடைய அந்த வர்த்தகருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.








