Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

Share:

740 கிராம் தங்கத்தைக் கடத்தியதாக நம்பப்படும் மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து indiago airline விமானத்தில் சென்னை சென்றடைந்த அந்த மலேசியப் பெண் இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகத்திற்கு இடமாக நடந்துக்கொண்ட அந்த மலேசியப் பெண்ணை உடல் பரிசோதனைக்கு உட்படுத்திய போது தனது உடலில் 740 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்படுள்ளதாக இந்திய சுங்கத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுத்தமான அந்த 24 காரட் தங்கத்தின் மதிப்பு 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மலேசிய ரிங்கிட் மதிப்பில் 2 லட்சம் வெள்ளி ஆகும். அந்த மலேசிய பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை தலைமை அதிகார் கேபி ஜேயகர் தெரிவித்தார்.

Related News