Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மோனோரயில் சக்கரம் கழன்று விழுந்து தீப்பற்றிக்கொண்டது
தற்போதைய செய்திகள்

மோனோரயில் சக்கரம் கழன்று விழுந்து தீப்பற்றிக்கொண்டது

Share:

கோலாலம்பூர் மாநகரில் பிரதான ரயில் சேவையை வழங்கி வரும் மோனோ ரயிலின் டயர் ஒன்று, கழன்று கீழே விழுந்து தீப்பற்றிக்கொண்டது.

இச்சம்பவம் இன்று நண்பகல் 12.57 மணியளவில் தித்திவங்சா மோனோ ரயில் நிலையத்திற்கு அருகில் ஜாலான் துன் ரசாக்கில் நிகழ்ந்தது என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி நோரிட்சுவான் முஹமாட் நோர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர், எரிந்து கொண்டிருந்த அந்த மோனோரயில் சக்கரத்தின் தீயை அணைத்தனர்.

சக்கரம் கழன்று விழுந்த போது, அந்த மோரோ ரயிலில் பயணிகள் இருந்தார்களா? இல்லையா? என்பது குறித்து உறுதிப்படுத்த இயவில்லை.

Related News