Oct 27, 2026
Thisaigal NewsYouTube

1எம்டிபி, தபுங் ஹாஜி, பெல்டா ஊழல்களைப் போன்ற முறைகேடுகள் இதுவரை கண்டறியப்படவில்லை – அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
1எம்டிபி, தபுங் ஹாஜி, பெல்டா ஊழல்களைப் போன்ற முறைகேடுகள் இதுவரை கண்டறியப்படவில்லை – அன்வார்

அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில், கடந்த காலங்களில் வெளிச்சத்துக்கு வந்த ஊழல் விவகாரங்களைப் போன்ற நிர்வாக முறைகேடுகள், தற்போதைய சூழலில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் 1எம்டிபி நிறுவனம், லெம்பாகா தபுங் ஹாஜி மற்றும் ஃபெல்டா எனப்படும் ஃபெடரல் லேண்ட் டெவலப்மெண்ட் அத்தோரிடி ஆகியவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறைகேடுகளை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த விவகாரங்களில் விதிமீறல்கள் மிக விரிவாக இருந்ததுடன், அவற்றை நியாயப்படுத்துவதும் கடினமாக இருந்ததாக அன்வார் நாடாளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த கால அனுபவங்களில் சாதகமான அம்சங்களும் குறைபாடுகளும் இருந்ததாகக் குறிப்பிட்ட அன்வார், இந்த விவகாரங்கள் அரச விசாரணை ஆணையமான ஆர்சிஐ அறிக்கைகள், சிறப்புப் பணிக்குழு அறிக்கைகள் மற்றும் 1எம்டிபி, ஃபெல்டா தொடர்பான வெள்ளை அறிக்கைகளில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முந்தைய நிறுவனங்களில் நாம் எதிர்கொண்டதைப் போன்ற முறைகேடுகள், இதுவரை நமது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் கண்டறியப்படவில்லை என்பதையும் அன்வார் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த விவகாரங்களை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் தாம் நம்புவதாகவும், இருப்பினும், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →