ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி அருகே உள்ள ஃபெல்டா லோக் ஹெங் செலாத்தான் பகுதியில், நேற்று இரவு நடந்த தாக்குதலில் ஃபெல்டா குடியிருப்பாளர் ஒருவர் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், தனது வீட்டுக்கு அருகே ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர், சாலையோரத்தில் பாதிக்கப்பட்ட நபரை கோடரியால் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் திரண்ட நிலையில், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் விசாரணை தெரிய வந்துள்ளது.
இது குறித்து கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோஃப் ஒத்மான் கூறுகையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.








