Oct 27, 2026
Thisaigal NewsYouTube

என்எஸ்எம் ஏவுகணைக்குப் பதிலாக புதிய ஏவுகணை: 3 வகைகளை ஆய்வு செய்யும் மலேசியா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
என்எஸ்எம் ஏவுகணைக்குப் பதிலாக புதிய ஏவுகணை: 3 வகைகளை ஆய்வு செய்யும் மலேசியா

மலேசியக் கடற்படையின் பயன்பாட்டில் உள்ள என்எஸ்எம் ஏவுகணைக்குப் பதிலாக எஸ்எஸ்எம் எனப்படும் புதிய ஏவுகணையைத் தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்ட ஆய்வில் தற்காப்பு அமைச்சு ஈடுபட்டுள்ளது.

இது குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறுகையில், மலேசியக் கடற்படை முன்மொழிந்துள்ள மூன்று வகையான எஸ்எஸ்எம் ஏவுகணைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில், ஏவுகணைகளின் செயல்பாட்டுத் தேவைகள், போர்க்கப்பல்களுடன் அவற்றின் பொருத்தம், கொள்முதல் செலவு மற்றும் கொள்முதல் செய்வதற்கான கால அட்டவணை ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவற்றில் ஒரு ஏவுகணை இறுதி தேர்வு செய்யப்பட்டு, கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ மாடியுஸ் தங்காவ், எஸ்எஸ்எம் ஏவுகணைக்குப் பதிலாக புதிய ஏவுகணையைத் தேர்வு செய்யும் நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்தும், ஐந்து எஸ்சிஎஸ் போர்க்கப்பல்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் நிதிச் செலவின முன்னேற்றம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →