Oct 26, 2026
Thisaigal NewsYouTube

பாகான் லாலாங் கடற்கரையில் முதலை நடமாட்டம்: வனவிலங்கு துறை விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகான் லாலாங் கடற்கரையில் முதலை நடமாட்டம்: வனவிலங்கு துறை விசாரணை

சிப்பாங், பாகான் லாலாங் கடற்கரையில் முதலை தென்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலைத் தொடர்ந்து, வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடல் மற்றும் கடற்கரைப் பகுதி என்பதால், அங்கு நேரில் ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஃபாக்ருல் ஹட்டா மூசா தெரிவித்தார்.

இதற்கிடையே, அப்பகுதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகே முதலை தென்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையாள சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →