வெளிநாட்டவர்களின் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 28,401 வர்த்தக உரிமங்களை வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சு ரத்து செய்துள்ளது.
இதற்காக 10,248 ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மசோதா மீதான நிறைவுரையின்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளில் 65,023 அபராதங்கள், 28,401 வர்த்தக உரிம ரத்துகள், 6,942 பறிமுதல் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகள் என மொத்தம் 100,366 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உரிம நிபந்தனைகளை மீறும் உள்ளூர் உரிமையாளர்களின் வர்த்தக உரிமங்களும் தயக்கமின்றி ரத்து செய்யப்படும் என்று அவர் எச்சரித்தார்.








