Oct 26, 2026
Thisaigal NewsYouTube

தக்கியுடினை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமா? ராயர் கடிதம் அளிக்க வேண்டும்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தக்கியுடினை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமா? ராயர் கடிதம் அளிக்க வேண்டும்!

நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை “முனாஃபிக்” எனக் குறிப்பிட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியுடின் ஹசானை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவுக்கு அனுப்பக் கோரும் ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், மக்களவைத் தலைவருக்கு அதிகாரபூர்வக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று ஜொஹாரி அப்துல் கேட்டுக் கொண்டார்.

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின்போது கடந்த திங்கட்கிழமை பயன்படுத்தப்பட்ட அந்தச் சொல்லை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கையை நாடாளுமன்றக் குழுவே முடிவு செய்யும் என்று இன்று மக்களவையில் தெரிவித்தார்.

முன்னதாக, அந்தச் சொல்லைத் திரும்பப் பெறுமாறு தக்கியுடினைக் கேட்டிருந்ததாகவும், ஆனால் அவர் அக்டோபர் 22ஆம் தேதியிட்ட கடிதத்தில் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைக்கு முன்மொழிந்தாரே தவிர, சொல்லைத் திரும்பப் பெறவில்லை என்றும் ஜொஹாரி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →