Oct 26, 2026
Thisaigal NewsYouTube

கே.எல்.ஐ.ஏ.வில் போதைப்பொருள் கடத்தல்: 202 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கே.எல்.ஐ.ஏ.வில் போதைப்பொருள் கடத்தல்: 202 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 77 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 93 பேர் கைது செய்யப்பட்டதுடன், 202.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 2,526 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பிரிட்டன் நாட்டினர் 26 பேர் என அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மலேசியர்கள் 23 பேர், சிங்கப்பூரர்கள் 11 பேர், பிரான்ஸ் நாட்டினர் ஆறு பேர், ஜப்பானியர்கள் ஐந்து பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் 2,407 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா இடம் பெற்றுள்ளது என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

சந்தேகத்துக்குரிய வேலை வாய்ப்பு வாக்குறுதிகளை நம்பி, பிறருக்குச் சொந்தமான பயணப் பெட்டிகளை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும், அவற்றில் என்ன இருக்கிறது என்பதைத் தெரியாமல் எடுத்துச் செல்வது சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் பொதுமக்களை எச்சரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →