கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மனைவியைச் சுட்டுக் கொல்ல முயன்றதுடன், அவரது மெய்க்காப்பாளரைக் கடுமையாகக் காயப்படுத்திய வழக்கில், முன்னாள் பயண நிறுவன மேலாளர் ஹாஃபிஸுல் ஹாவாரிக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை, கைது செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிட வேண்டும் என்ற மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்தத் தண்டனை, கிளந்தான் மாநிலம் கோத்தா பாருவில் அவர் அனுபவித்து வரும் வேறு வழக்குகளுக்கான சிறைத் தண்டனை முடிந்த பின்னரே தொடங்க வேண்டும் என்ற சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவு சட்டபூர்வமானதும் நியாயமானதும் என்று நீதிபதி ஷாம்சுல்பாஹ்ரி இப்ராஹிம் தீர்ப்பளித்தார்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 5ஆம் தேதி வரை, சுமார் 20 மாதங்கள் பிணையில் விடுவிக்கப்படாமல் இருந்ததைத் தண்டனைக் காலத்தில் கணக்கிட வேண்டும் என்று தற்காப்புத் தரப்பு வாதிட்டது. எனினும், உயர் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தியது.








