Oct 27, 2026
Thisaigal NewsYouTube

மண் சரிவில் உயிரிழந்த மருத்துவர்: மார்பில் பலத்த காயம், மூச்சுத் திணறல் காரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மண் சரிவில் உயிரிழந்த மருத்துவர்: மார்பில் பலத்த காயம், மூச்சுத் திணறல் காரணம்

பினாங்கு, பாயா தெருபோங்கில் உள்ள தாமான் ஸ்ரீ ரம்பாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்த 73 வயது மருத்துவர் டாக்டர் வோங் கார் லின், மார்பில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் மண் சரிவால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் நேற்று இரவு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை, இன்று அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்ததாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் Abdul தெரிவித்தார். இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் பெர்னாமாவிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மண் சரிவு அபாயம் நீடிப்பதால், பாதிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாகவும், வெளியேற்றப்பட்ட ஆறு வீடுகளைச் சுற்றிப் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →