Oct 27, 2026
Thisaigal NewsYouTube

கடத்தல் படகைத் துரத்தியபோது விபத்து – கடல்சார் அமலாக்க அதிகாரி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடத்தல் படகைத் துரத்தியபோது விபத்து – கடல்சார் அமலாக்க அதிகாரி பலி

பெர்லிஸ் கடற்பகுதியில் ஆவணமற்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகைத் துரத்தியபோது ஏற்பட்ட விபத்தில், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் பெர்லிஸ், சுங்கை பாடாங் கடற்பகுதியில் வழக்கமான எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய படகைக் கண்டனர். அதனைத் துரத்தியபோது, அமலாக்கப் படகு கான்கிரீட் கட்டமைப்பில் மோதியதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் கெடா மற்றும் பெர்லிஸ் கடல்சார் தலைமையகத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றிய மூத்த அதிகாரி ரோஷைமி ரிட்ஸுவான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைச்சின் விவாதத்திற்குப் பதிலளித்தபோது டத்தோ ஸ்ரீ சைஃபுடின், உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →