பினாங்கு கடலடிச் சுரங்கப்பாதைத் திட்ட ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மீதான அரசுத் தரப்பு விசாரணை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று நிறைவடைந்தது.
வழக்கில் மொத்தம் 39 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகத் துணை அரசு வழக்கறிஞர் வான் ஷஹாருடின் வான் லாடின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை 2027 ஜனவரி 13ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனவரி 26, 27ஆம் தேதிகளில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
முதலமைச்சராக இருந்தபோது, சுரங்கப்பாதைத் திட்டத்தின் லாபத்தில் 10 விழுக்காட்டைப் பெற முயன்றதாகவும், தொழிலதிபர் ஸாருல் அஹ்மாட் ஸுல்கிஃப்லி என்பவரிடமிருந்து 33 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகவும் லிம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








