Oct 27, 2026
Thisaigal NewsYouTube

வேஸ் செயலிக்குப் போட்டியல்ல தூஜூ – நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேஸ் செயலிக்குப் போட்டியல்ல தூஜூ – நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் விளக்கம்

தூஜூ வழிகாட்டிச் செயலி, வேஸ் செயலியுடன் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஸ்னி முஹமட் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து நிர்வாக மையத்தை மேம்படுத்தும் நோக்கில், தனியார் செயலி உருவாக்குநர்களுடன் இணைந்து தூஜூ உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது மேம்பாட்டில் உள்ள தூஜூ, டோல் சாவடி நெடுஞ்சாலைகள் மற்றும் கூட்டரசு நெடுஞ்சாலைகளில் மட்டுமே செயல்படுகிறது. நாட்டின் அனைத்துச் சாலைகளுக்கும் வழிகாட்டும் அளவுக்கு அதன் திறன் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்றும் அவர் விளக்கினார்.

கடந்த வாரம், தகவல் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்தது.

தூஜூ செயலி எட்டு லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றிருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பயனர்களுக்கு எளிதான வசதிகள் இல்லாதது குறித்து புகார்கள் எழுந்துள்ளன.

தூஜூ மூலம் நெடுஞ்சாலை ஓய்வு இடங்கள், வசதிகள், அவசரத் தொடர்புகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறித்த தகவல்களைப் பெற முடியும் என்றும் ஹஸ்னி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →