Oct 27, 2026
Thisaigal NewsYouTube

நாடு முழுவதும் 22,000 தீபாவளி உணவுக் கூடைகள் – டத்தோ ஸ்ரீ ரமணன் தொடங்கி வைத்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடு முழுவதும் 22,000 தீபாவளி உணவுக் கூடைகள் – டத்தோ ஸ்ரீ ரமணன் தொடங்கி வைத்தார்

தீபாவளி திருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களுக்கு 22,000 உணவுப் பொருள் கூடைகள் வழங்கும் திட்டத்தை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

2022ஆம் ஆண்டு 5,000 கூடைகளுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், படிப்படியாக அதிகரித்து தற்போது 22,000 கூடைகளை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்களின் உண்மையான தேவையை உணர்ந்து இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பத்துகேவ்ஸ், டேவான் ரக்யாட் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மனித வள அமைச்சின் தீபாவளி அன்பளிப்பு கூடைகளை வழங்கும் நிகழ்வில் பேசிய டத்தோ ஸ்ரீ ரமணன், தீபாவளிக்கு முன்னதாக அனைத்துக் கூடைகளும் பயனாளிகளிடம் சேர்க்கப்படும் என்றார்.

சபாவில் விநியோகப் பணிகளைத் துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் ஒருங்கிணைப்பார் என்றும், தீபாவளி மட்டுமன்றி பிற பண்டிகைகளின்போதும் தேவைக்கேற்ப உதவிகள் அதிகரிக்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே தீபாவளி உணவு அன்பளிப்புக் கூடைகளை பெற்று கொண்ட மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். ஒவ்வோர் அன்பளிப்பு கூடையிலும் கிட்டத்தட்ட 200 ரிங்கிட் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உணவுப் பொருட்கள் தீபாவளியை கொண்டாடுவதற்கு தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சின் உயர் அதிகாரிகள், மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர், சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் அஹ்மாட் அப்துல் ரஹிம் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →