Oct 27, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்ஐஏ முனையம் 1-ல் பயணிகளுக்கு வழிகாட்ட ஹோலோகிராம் தொழில்நுட்பம் அறிமுகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்ஐஏ முனையம் 1-ல் பயணிகளுக்கு வழிகாட்ட ஹோலோகிராம் தொழில்நுட்பம் அறிமுகம்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இன் இணைக் கட்டிடத்தில், பயணிகளின் வருகை நடைமுறைகள் குறித்த தகவல்களைப் பெற உதவும் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.

இது குறித்து ஏகேபிஎஸ் துணைத் தலைமை இயக்குநர் இஸ்மாயில் மொக்தார் கூறுகையில், மலேசியாவுக்கு வருகை புரியும் பயணிகள் தேவையான தகவல்களை எளிதாகப் பெறும் வகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை மேம்படுத்தும் முகமையின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 1,259 மின்சார மற்றும் மின்னணுக் கழிவுக் கொள்கலன்களை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஏகேபிஎஸ் தனது 2026–2030-ஆம் ஆண்டுக்கான ஐந்தாண்டு செயல்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.

நாட்டின் நுழைவுப் பகுதிகளில் அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகள் தொடர்பான அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த ஆவணச் சரிபார்ப்பு, தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →