Oct 27, 2026
Thisaigal NewsYouTube

வடகிழக்குப் பருவ மழை தொடங்கம் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஸாஹிட் எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வடகிழக்குப் பருவ மழை தொடங்கம் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஸாஹிட் எச்சரிக்கை

மலேசியாவில் 2026 - 27ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை இன்று செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பருவமழையானது 2027 -ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கலாம் என்றும், தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியாவின் கணிப்பின்படி, 2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி மாதம் வரை மூன்று முதல் ஐந்து முறை நீண்ட நேரக் கனமழை பெய்யக்கூடும்.

இதனால் ஆற்றங்கரைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என்றும் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →