Oct 27, 2026
Thisaigal NewsYouTube

ஆடை நிறுவனத் தொழிலதிபரிடம் மன்னிப்புக் கேட்க விக்னேஷ்வ்ர ராவிற்கு நான்கு நாட்கள் கெடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடை நிறுவனத் தொழிலதிபரிடம் மன்னிப்புக் கேட்க விக்னேஷ்வ்ர ராவிற்கு நான்கு நாட்கள் கெடு

மலேசிய ஆடை நிறுவனத் தொழிலதிபர் கிரிஸ்டி ங் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிராகச் சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட ஜே விக்னேஷ்வ்ர ராவ், 4 நாட்களுக்குள் 2 நாளிதழ்களில் மன்னிப்புக் கோர வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

36 வயதான விக்னேஷ்வ்ர ராவ், கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக மன்னிப்பு அறிவிப்பை வெளியிட முடியவில்லை என நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

தனது மனைவியும், நண்பர்களும் கூட தன்னை விட்டு விலகி விட்டதாகவும் நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அதனைப் பரிசீலித்த நீதிபதி அர்ஸியா அபாண்டி, அவர் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறியதாக நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மன்னிப்பு அறிவிப்புக்கான செலவை கிரிஸ்டி ங் தரப்பு முதலில் ஏற்க வேண்டும் என்றும், பின்னர் விக்னேஷ்வ்ர ராவ் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால், வரும் நவம்பர் 2-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இக்குற்றத்திற்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →