May 22, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

சரவாக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் Matang, Dewan Serbaguna Taman Malihah பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரண மையமாக திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி வரையில் 418 பேர் உட்பட 111 குடும்பங்கள் Batu Kawa, Matang, Bau ஆகிய நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் நிவாரண மையமாக திறக்கப்பட்ட Dewan Serbaguna Taman Malihah - வில் தற்போது 182 பேர் மற்றும் 48 குடும்பங்கள் தங்கியிருப்பதாக சரவாக்கின் மாநில பேரிடர் மேலாண்மை குழு ஓர் அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.

Related News