Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியை மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியை மீது குற்றச்சாட்டு

Share:

தனது பராமரிப்பில் விடப்பட்ட நான்கு வயது சிறுவன், அருகில் உள்ள குளத்தில் விழுந்து, மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணம் அடைந்த சம்பவத்தில் அலட்சியப் போக்கே காரணம் என்று கூறி, முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர், ஈப்போவில் உள்ள நீதிமன்றத்தில் மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இதற்கு முன்பு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 59 வயதான S. Esther Christina என்ற அந்த பாலர் பள்ளி ஆசிரியைக்கு எதிரான வழக்கு, இன்று செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி Ainul Shahrin Mohamad முன்னிலையில் குற்றஞ்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 10.20 மணியளவில் ஈப்போ, Bandar Baru Sri Klebang, The Centro Club- பில் 4 வயது சிறுவன் V. Thanesh Nair நீச்சல் குளத்தில் விழுந்து இறந்ததற்கு பாலர் பள்ளி ஆசிரியை என்ற முறையில் Esther Christina-வின் கவனக்குறைவும், அலட்சியமே காரணமாகும் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News