Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தாய்மொழிப்பள்ளிகளை பாஸ் கட்சி ஏற்க மறுப்பது ஏன்?
தற்போதைய செய்திகள்

தாய்மொழிப்பள்ளிகளை பாஸ் கட்சி ஏற்க மறுப்பது ஏன்?

Share:

நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டுள்ள தாய்மொழிப்பள்ளிகள், கல்விச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக செயல்பட்டு வந்த போதிலும் தாய்மொழிப்பள்ளிகளின் தோற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லாததைத் போல் இருக்கும் பாஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் தியோ நி சிங் கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தாய்மொழிப்பள்ளிகள் விவகாரம் ஏன் சர்ச்சையாக்கப்படுகிறது என்பது குறித்து தமக்கு விளங்கவில்லை என்று தொடர்புத்துறை துணை அமைச்சருமான தியோ நி சிங் குறிப்பிட்டார்.

தாய்மொழிப்பள்ளிகள் இன்னமும் பெற்றோரின் முதன்மை தேர்வாக இருப்பதை புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் பாஸ் கட்சிக்காக தாம் அனுதாபப்படுவதாக தியோ நி சிங் தெரிவித்தார்.

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாய்மொழிப்பள்ளிகள் விவகாரத்தை சர்ச்சையாக்கி வரும் பாஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து எதிர்வினையாற்றுகையில் தியோ நி சிங் மேற்கண்டவாறு கூறினார்.

பாஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள், தங்கள் பிள்ளைகளை சீன மொழிப்பள்ளிப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்ற எதார்த்தமான உண்மையை அந்த மதவாத கட்சி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் தியோ நி சிங் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்