Mar 22, 2026
Thisaigal NewsYouTube
'Oyen Ucuk' மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

'Oyen Ucuk' மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்

Share:

மூவார் , ஜூன் 13-

சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டம் 2012 SOSMA -வின் கீழ் இரண்டு முறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர், கடந்த ஆண்டு முதல் இஸ்லாமிய நாடுகளை ஆதரித்த குற்றத்திற்காக இன்று மீண்டும் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

31 வயது முஹம்மது சானி மஹ்தி சஹர் என்கிற அந்த தோட்டத் தொழிலாளி நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அமைதியை நிலைநிறுத்தினார்.

அதுமட்டுமின்றி, இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட SOSMA சட்டத்தின் கீழ் இருப்பதால் அவ்வாடவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் மற்றும் குற்றம் செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்ய வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130J (1) (a) கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9 மணியளவில் புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் E8 பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு