Jun 12, 2026
Thisaigal NewsYouTube
லஹாட் டத்துவில் குகைக்குள் பறவைக் கூடு தேடி சென்ற 61 வயது முதியவர் மாயம்
தற்போதைய செய்திகள்

லஹாட் டத்துவில் குகைக்குள் பறவைக் கூடு தேடி சென்ற 61 வயது முதியவர் மாயம்

Share:

சபா மாநிலம் லகாட் டத்துவில் உள்ள தெபாடுங் குகையில் பறவைக் கூடு சேகரிக்கச் சென்ற 61 வயது முதியவர் ஒருவர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்மாயில் இப்ராகிம் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்நபர், கடந்த மே 26-ம் தேதி, தனது இரு நண்பர்களுடன் குகைக்குள் பறைக் கூடு தேடிச் சென்றுள்ளார்.

அப்போது இரு நண்பர்கள் வேறு பாதையில் செல்லவே, இஸ்மாயில் மட்டும் மற்றொரு பாதையில் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறிது நேரத்திற்குப் பின்னர் வெளியே வந்த நண்பர்கள், இஸ்மாயிலைக் காணாதது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது குகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்மாயிலை கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவரது நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Related News