Jun 9, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் சட்டமன்றம் கலைப்பு: சபாநாயாகரிடமிருந்து அதிகாரப்பூர்வத் தகவலைப் பெற காத்திருக்கிறது தேர்தல் ஆணையம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் சட்டமன்றம் கலைப்பு: சபாநாயாகரிடமிருந்து அதிகாரப்பூர்வத் தகவலைப் பெற காத்திருக்கிறது தேர்தல் ஆணையம்

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அம்மாநில சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து பெற்றவுடன், 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான சிறப்புக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறப்புக் கூட்டத்தில் மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார்.

நேற்று, சௌஜானாவில் அமைந்துள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.

ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்தே, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பானது புதிய மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்