டுங்ஙுன்,ஜன.30
பத்து ரக்கிட், கம்போஸ் டத்தோ ரசாலி இஸ்மாயில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த 64 மாணவர்களை ஏற்றி வந்த பஸ், டுங்குன் கம்போங் ஜொங்கோக் பத்து அருகே இன்று நண்பகல் 12.30 மணி அளவில் கவிழ்ந்தது.
வெள்ளத்திற்குப் பிறகான உதவிகளைச் செய்ய சென்று கொண்டிருந்த அனைவரும் ஆபத்து ஏதும் இன்றி காப்பாற்றப்பட்டனர்.
புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் கசாலி சுலைமான் கூறுகையில், பேருந்து ஓட்டுநர் ஒரு குறுகிய மாற்று சாலையைப் பயன்படுத்தி இருக்கிறார், அப்பாதையை வழிகாட்டும் செயலி காட்டி இருக்கிறது அதன்படி சென்றதால் இந்தக் குறுகலானப் பாதையில் பஸ்ஸை செலுத்தி இருக்கிறார் என கஸாலி தெரிவித்தார்.
சேறும் சகதியுமான பாதையில் பஸ் செலுத்தப்பட்டதால், அது கவிழ்ந்தடு எனவும் அவர் சொன்னார்.

Related News

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

இந்திய சமூகத்திற்கான முக்கிய அறிவிப்பு விரைவில்- டத்தோ ஸ்ரீ ரமணன்


