Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிப்படைந்த 28 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிப்படைந்த 28 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

Share:

படே, லாங் ஹவுஸ் லாவெங் - கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மொத்தம் 28 பேர் Layar நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நேற்று மாலை 6.41 மணியளவில் இச்சம்பவம் குறித்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Betong தீயணைப்பு, மீட்புப் படையின் தலைவர் வின்சென்ட் பேலிங் யாபி தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள நீண்ட வீடுகளில் வெள்ளம் 0.6 மீட்டர் உயர்ந்திருப்பதை தொடர்ந்து, குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வின்சென்ட் பேலிங் யாபி கூறினார்.

வெள்ளப்பெருக்கின் அளவு குறையும் வரை பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நிவாரண மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக வின்சென்ட் பேலிங் யாபி மேலும் அறிவித்தார்.

Related News