May 22, 2026
Thisaigal NewsYouTube
அந்த விவகாரம் விசாரணை செய்யப்பட்ட வருகிறது
தற்போதைய செய்திகள்

அந்த விவகாரம் விசாரணை செய்யப்பட்ட வருகிறது

Share:

ஜொகூர் பாரு, மே 29-

ஜோகூர் ​ரீஜண்ட் ( REGENT ) துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்-மின் உடன் செல்லும் எஸ்கார்ட் மெய்க்காவலர்களில் ஒருவர், நேற்று கோலாலம்பூரில் உள்ள ​ஹோட்டல் ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போ​லீசார் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலை​மையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் Datuk செரி முஹம்மது ஷுஹைலி முகமது ஜைன் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் ​கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஷுஹைலி ஜைன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. அந்த மாற்றுத் திறனாளி ஏன் தாக்கப்ப்டடார் என்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்​லை என்று ஷுஹைலி ஜைன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த மாற்றுத் திறனாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறாரா? என்று கேட்ட போது அது குறித்து கருத்துரைக்க ஷுஹைலி ஜைன் மறுத்து விட்டார்.

Related News