Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஎம் மாணவர்களின் உயர்க்கல்விக் கூட விண்ணப்ப முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஎம் மாணவர்களின் உயர்க்கல்விக் கூட விண்ணப்ப முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன்.15-

2025/2026 ஆம் ஆண்டுக்கான பொது உயர்கல்வி நிலையங்களான பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக், சமூகக் கல்லூரிகள், மாரா உயர் கல்விப் பிரிவு ஆகியவற்றில் உயர்கல்வி தொடர்வதற்கான எஸ்பிஎம் மாணவர்களின் விண்ணப்ப முடிவுகள் நாளை ஜூன் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை நாளை நண்பகல் 12 மணி முதல் ஜூன் 25 மாலை 5 மணி வரை அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக இணையத்தளங்களிலும் UPUPocket செயலி மூலமும் சரி பார்க்கலாம்.

வெற்றி பெறாத விண்ணப்பதாரர்கள் ஜூன் 16 முதல் 10 நாட்களுக்குள் இணையம் வழியாக மேல் முறையீடு செய்யலாம். வெற்றி பெற்றவர்களுக்கு, ஜூன் 17 முதல் அதிகாரப்பூர்வ வாய்ப்பு வழங்கல் கடிதங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →