கோலாலம்பூர், நவம்பர்.11-
கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டலில் இறந்த கிடந்த தைவானைச் சேர்ந்த ஊடகப் பிரபலமான பெண்ணுக்கும், மலேசியாவின் rap பாடகர் Namewee- க்கும் இடையில் பிரத்தியேக உறவு இருந்துள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
பிரத்தியேக உறவு என்பது நெருங்கிய நட்புக்கும் மேல் ஆழமானது. எனினும் இப்போதைக்கு இவ்வழக்கு தொடர்பான மேல் விவரங்களை வெளியிட முடியாது என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.
இன்று தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ஹோட்டலின் குளியலறையில் இறந்து கிடந்த தைவானைச் சேர்ந்த 31 வயதுடைய Hsieh Yu-hsin என்பவரின் இறப்பு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்ட போதிலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் அது கொலை என முடிவு செய்யப்பட்டது.
தற்போது போலீஸ் தடுப்புக் காவலில் உள்ள அந்த ராப் பாடகர், ஆகக் கடைசியாக அந்த தைவான் பெண்ணைச் சந்தித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.








