Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் 41 இந்தியர்கள் உட்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் 41 இந்தியர்கள் உட்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Share:

குவைத்-டில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த வேளையில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயத்திற்கு ஆளாகினர்.

சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் மொத்தம் 195 வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்து வந்ததாகவும் இவ்விபத்தில் 20க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடைய 41 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரியப்படுகிறது.

நேற்று நிகழ்ந்த இக்கோர விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தூங்கும் போது புகையை நுகர்ந்த காரணத்தினால் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

Related News